Skip to product information
1 of 2

வசந்தம் வெளியீட்டகம்

கடவுளின் கதை பாகம் 5

கடவுளின் கதை பாகம் 5

Regular price Rs. 250.00
Regular price Sale price Rs. 250.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

எந்த மதத்தையும் சாராதவர்கள் கணிசமாக வந்து விட்டார்கள், அவர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்து விட்டார்கள். உள்ள பல மதங்களுக்கு ஒரேயொரு மத மாற்று அல்ல, சகல மதங்களுக்குமே ஒரு மதமற்ற மாற்று புறப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவே உலக வாழ்வின் பரபரப்பான உண்மை . கடவுள் தனது மூன்று அதிகாரங்களையும் மனிதனிடம் பறிகொடுத்துக் - கொண்டிருக்கிற காட்சியே இன்றைய வாழ்க்கை நடப்பு.

 

உலக ஞானிகள் பலரும் கடவுளைப் பற்றிப் பேசவே செய்திருக்கிறார்கள். அந்தக் கற்பிதம் பற்றி இந்த நிஜமானவர்கள் என்ன நினைத்தார்கள் என்பதை அறிய சுவையாகவே இருந்தது.

கடவுளை தரிசிக்கிற சாக்கில் இந்த ஞானிகளை தரிசிக்கிற “புண்ணியம்” கிட்டியது. நிச்சயமான ஒன்றைப் பற்றி இத்தனை நூற்றாண்டுகளாக இத்தனைப் பேச்சுக்கள் தேவையில்லை. இப்படி விடாது பேசப்பட்டதாலேயே கடவுளின் இருப்பு நிச்சயமற்றது என்பது நிச்சயமாகிறது. மிஞ்சிய கேள்வி என்னவென்றால் இன்னும் எவ்வளவு காலம் இந்தப் பேச்சு அடிபடப்போகிறது என்பதுதான். அதுபற்றிய எனது கணிப்பே நூலின் கடைசி அத்தியாயம்.

மனிதகுலம் நடந்து வந்த பாதையை எத்தனை முறை திரும்பிப் பார்த்தாலும் அலுக்கப்போவதில்லை. மகாக் கலைஞர்களின் கற்பனைகளைவிட மனிதகுல வரலாறு பெரும் அதிசயங்களைக் கொண்டது. அதிலொன்றுதான் கடவுள். இன்னும் பல அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

யுக மாறுதலானது ஒற்றைக் காரணியைக் கொண்டதா, ஒன்றுக்கு மேற்பட்டதைக் கொண்டதா, பல காரணிகளில் ஒன்றுதான் அஸ்திவாரத்தைப் புரட்டிப் போடுகிறதா, அப்படியெனில் இதர காரணிகளின் பங்களிப்பு என்ன, ஒரு யுக மாறுதலில் நடந்தது போலவே அடுத்த யுக மாறுதலும் வெறும் கூறியது கூறலா அல்லது அதற்கென்று சில சிறப்புக் கூறுகள் உண்டா, உண்டு என்றால் அவை என்ன, முந்திய யுக மாறுதல்களின் அதே கணக்கின்படிதான் தற்போதைய யுகம் நடப்புக்கு வந்ததா அல்லது இதற்கென்று தனித்த அம்சங்கள் உண்டா, அனைத்திற்கும் மேலே தற்போதைய யுகம் எப்போது முடிவுக்கு வரும், அது எப்படி வரும், அதற்கான உந்து சக்திகள் என்னவாக இருக்கும்?

படியுங்கள் அனைத்தும் விளங்கும்.!

View full details