கடவுள் பிறந்த கதை
கடவுள் பிறந்த கதை
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
கடவுளுக்கு எதிரான போராட்டம் என்பது கடவுள் பிறந்த கதையை மதங்கள் பிறந்த கதையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்தான் துவங்குகிறது என்பார்கள்.அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்துள்ள புத்தகம் இது.பிடிபடாத மர்மங்களோடு இருந்த இயற்கையின் சக்திகளை சில மந்திரங்களின் மூலம் சில சடங்குகள் மூலம் கட்டுப்படுத்த முயன்ற மனித நடவடிக்கையே ஆரம்ப கால நம்பிக்கையாக இருந்தது.நம்மோடு கூட இருந்து மரணத்தினால் காணாமல் போகிற மனிதர்கள் ஆவி ரூபத்தில் நம்மோடு இருப்பதான மனத் தேறுதலை அடிப்படையாகக் கொண்டு ஆவி வழிபாடு தோன்றியது.மக்கட்பேற்றைத் தரும் ஆண் பெண் குறிகளை வழிபடும் போக்கும் முன்னோரை வழிபடும் போக்கும் தம் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் உதவியாக இருக்கும் அல்லது இடைஞ்சலாக இருக்கும் விலங்குகளை பாம்புகளை வழிபடும் போக்கும் என மெல்ல மெல்ல வழிபாடுகள் வளர்ந்த கதை சுவையான உதாரணங்களுடன் சொல்லப்பட்டுள்ளன.பல கடவுள்களுக்கு பதிலாக ஒரு கடவுளை ஆதிக்க வர்க்கம் கொண்டுவந்து மதங்களை நிறுவி மக்களின் எதிர்ப்புணர்வுகளை மழுங்கடிக்கும் கதையும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.மதமென்னும் மதமதப்பிலிருந்து மீண்டால்தான் துயரங்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என புத்தகம் முடிகிறது