கடவுள் ஒருவரே
விடுதலைப் போராட்டத்தைப் போலவே தமிழ் இலக்கிய வரலாற்றிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கால கட்டத்தில் வாழ்ந்த வர் வ.உ.சி.
விடுதலை வேள்வியின் தொடக்ககால அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கி வரலாறு படைத்தவரான அவர், இலக்கியத் துறையிலும் சாதனைகள் நிகழ்த்தியவர்.
மொழி பெயர்ப்பாளராகவும் உரையாசிரியராகவும் பதிப்பா சிரியராகவும் விளங்கிய வ.உ.சி. சிறந்த கட்டுரையாளராகவும் | விளங்கிப் பல அரிய கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றுள், என் பார்வைக்குக் கிடைத்தவை இங்குத் தொகுக்கப்பட்டுள்ளன.விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவதற்கு முன்பே இலக்கிய முயற்சிகளில் கவனம் செலுத்தினார். 1900 ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் 'விவேகபாநு' என்ற ஆன்மீகத் திங்கள் இதழ் வெளிவருவதற்கு முன்னின்று பெரிதும் உழைத்தவர் அவர். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழில் வெளிவந்த ஆன்மிகத் தொடர்பான இதழ்களுள் குறிப்பிடத்தக்கது. 'விவேகபாநு'. இந்த இதழில்தான் வ. உ. சி. யின் முதல் கட்டுரையும் வெளிவந்தது. 'கடவுளும், பக்தியும் என்பது கட்டுரைத் தலைப்பு. கடவுளைப் பற்றியும் பக்தியைப் பற்றியுமான உன்னதமான விளக்கங்கள்