கடவுள் மதக் கட்டுக்கதைகளும் காசு பறிக்கும் சாமியார்களும்
கடவுள் மதக் கட்டுக்கதைகளும் காசு பறிக்கும் சாமியார்களும்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
டாக்டர் கோவூர் (10-4-1898 18-9-1978)கோவூர் 1898 ஏப்ரல் 10 ஆம் நாள் கேரள மாநிலம் திருவல்லாவில் பிறந்தார். 1919 இல் 21 ஆவது வயதில்தான் பேரா. ஏ. டி. கோவூர் பள்ளி இறுதி ஆண்டில் தேர்ச்சி பெற்றார். இந்தக் காலகட்டத்தில் அவரை கிறித்தவப் புரோகிதராக்க குடும்பத்தினர் விரும்பினார்கள். அன்று கடவுள் - மத நம்பிக்கையுடையவராக இருந்த போதிலும் மேற்படிப்பில் நாட்டம் கொண்டிருந்ததால் அந்த விருப்பத்துக்கு அவர் உடன்படவில்லை . கோவூர் இலங்கைக்குச் சென்ற காலத்தில் அங்கே பகுத்தறிவாளர் சங்கங்கள் இல்லை. இங்கிலாந்திலுள்ள உலக அய்க்கிய சுதந்திர சிந்தனையாளர்கள் (Wond Union of Free Thinkers) என்ற இயக்கத்தில் அவர் உறுப்பினரானார்; அந்த இயக்கத்தின் ஏடுகளையும் நூல்களை யும் வரவழைத்துப் படித்தார். கொழும்புவைச் சேர்ந்த சில தமிழ் இளைஞர்களும் சில ஆங்கிலேயர்களும் சில மலையாளிகளும் சேர்ந்து இலங்கை பகுத்தறிவாளர் சசங்கத்தை உருவாக்கிய பொழுது கோவூர் அதில் உறுப்பினராகச் சேர்ந்தார். 1959 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அந்தச் சசங்கத்தின் தலைவராக ஆன கோவூர் 1971, 1975, 1976 ஆகிய ஆண்டுகளில் தெய்வீக ஆற்றல் மறுப்புப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஒரிசா உள்பட பல மாநிலங்களில் பெரிய அளவில் மாநாடுகள் நடத்தப்பட்டன. 1978 செப்டம்பர் 18 ஆம் நாள் ஆபிரகாம் தாமஸ் கோவூர் காலமானார். புகழ்பெற்ற பகுத்தறிவாளரான திரு. ஜோசப் இடமருகு, கோவூரின் கட்டுரைகள் மலையாள மொழியில் நூல் வடிவில் வெளிவர முழு முயற்சி எடுத்து வெற்றியும் கண்டார்.