காவிரி - பிரச்சனையின் வேர்கள்
காவிரி - பிரச்சனையின் வேர்கள்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
நதியைப் பொறுத்தவரை அது பாயும் நிலப்பரப்பு மட்டும் தான் அந்தநதிசம்மந்தப்பட்டது. மாநில எல்லைக்கோடுகள் நதிகளுக்குக் கிடையாது. காவிரி தான் ஓடுவதை பாய்வதை பயன் தருவதை தானே இயற்கையாகத் தீர்மானித்திருந்தது. மாநில எல்லைக் கோடுகள் பின்னர் மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டன.
பல நூற்றாண்டுகளுக்குச் சொந்தமாகி வாரி வழங்கிய காவிரி தன்னைச் சுற்றி வரும் சோகச் செய்திகளால் இறுக்கமாகி விட்டாள். பாரம்பர்யமாக காவிரிமடியில் தலை சாய்த்து அமுதுண்டவர்கள் தற்கொலை செய்து மடிகிறார்கள். காவிரி கலங்குகிறாள். காவிரியின் கரைகளில் நீதிகேட்டு கண்ணகி நடந்தது ஒரு காலம். இப்போது காவிரியே நீதிகேட்டு தெருவில் அலைகிறாள்.
இப்போதும் நெல்லி மரத்தடியில் காவிரி ஊற்றாகத்தான் பிறப்பெடுத்து ஓடி வருகிறாள். அதன் தண்ணீர் முன் போல் தேன் கனியாக இனிக்கவில்லை. கண்ணீரால் உப்புக் கரிக்கிறது.
- காவிரிப் பிரச்சனை குறித்து பல நூற்றாண்டு அரசியலை இந்நூல் ஆராய்கிறது.