இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? (இரு பாகங்கள்)
அவர் ஆரியம் விலக்கிய தமிழையே விரும்பினார்! அவர் முன்வைத்த சமூகநீதித் தத்துவம் என்பது தமிழர்கள் அதிகாரம் பெற்று உன்னதமான இடத்தை அடைவதையே நோக்கமாகக் கொண்டது!. அவர் கேட்ட தமிழ்நாடு என்பது தன்னிறைவு பெற்ற முழுமையான தமிழ்த் தேசமே! ஆனால் இன்று அவர் சிலரால் துரோகியாக அடையாளம் காட்டப்படுகிறார். யாருக்கும் எவருக்கும் துரோகம் செய்து வாழ வேண்டிய வாழ்க்கை முறை அவருக்கு இல்லை. அவரை விமாசிப்பவர்களுக்கு வேண்டுமானால் அத்தகைய சூழல் இருக்கலாம்! அவர் குறித்த அறியாமையால் சில தமிழ்ப்போலிகள் தமிழ்க்களத்தை நாசம் செய்து வருகிறார்கள். அந்த அவதூறுகளுக்கான பதிலே இது! அவர் வாழ்ந்த காலத்து குடிஅரசு, விடுதலை இதழ்களின் நேரடி பதில்கள் இவை! 75 ஆண்டுகாலம் வெளியான பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் இருந்து இந்தப் பதிலுரை தயாரிக்கப்பட்டுள்ளது! அவர் குறித்த வரலாறு மட்டுமல்ல. அவரைச் சுற்றிலும் 100 ஆண்டுகால அரசியல் இலக்கியக் களங்களின் வரலாறு! அவரோடு சேர்த்து தமிழறிஞர் அனைவரையும் நீங்கள் அறியலாம்! சிறியர் கிளப்பிய அவதூறுகளின் மூலமாக உண்மைப் பெரியாரை உணர்த்துகிறது இந்த நூல்!
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.