இதுதான் ராமராஜ்யம்
Original price
Rs. 20.00
-
Original price
Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00
-
Rs. 20.00
Current price
Rs. 20.00
10 ஆண்டுகளுக்கு முன் இச்சிறுநூல், திராவிட இயக்கத்தமிழர் பேரவையினால் வெளியிடப்பெற்றது. அந்த ஆண்டே விற்றும் தீர்ந்து விட்டது. எனினும் மறு அச்சு கொண்டுவராமல் விட்டுவிட்டோம். ஆனால் இன்றைய அரசியல் சூழல் மீண்டும் இந்நூலின் தேவையை எங்களுக்கு உணர்த்தியது. சில நாள்களுக்கு முன்னர், ராம ராஜ்ய ரத யாத்திரை தமிழகத்திற்குள் நுழைந்தபோது ஏற்பட்ட எதிர்ப்பு குறித்துச் சரியான புரிதல் இன்றி, அவர்கள் மதத்தை, அவர்கள் பரப்பக்கூடாதா என்று சிலர் கேட்டனர். ராம ராஜ்யம் என்பது, வெறும் ஆன்மீகப் பரப்புரை அன்று, அது ஓர் அரசியல் முழக்கம். ராம ராஜ்யம் ஏற்படுமானால் அது எப்படி இருக்கும் என்பதை விளக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இப்போது அது காலத்தின் பெரும் தேவையாக உருவெடுத்துள்ளது.
தற்போதய அரசியல் சூழலை பற்றிய மிகக் சிறப்பான விமர்சனங்களும், பார்பனியம் பற்றிய சுபவீயின் விமர்சனங்களையும் உள்ளடக்கிய நூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.