இது யாருடைய வகுப்பறை...?
கற்றல் என்றால் என்ன? அது வகுப்பறையில் மட்டும் நடப்பதல்ல, கற்றல் என்பது பேசும் மொழி, பழக்க வழக்கம், கொள்கை, லட்சியம், ஆளுமை குணம், புலன்காட்சி என அனைத்திலும் கற்றல் இருக்கிறது எனவும் இதைத்தான் கல்வியில் உலகில் தலை சிறந்து விளங்கும் சுவட்சர்லாந்து, பின்லாந்து, கியூபாவில் பின்பற்றுகிறார்கள் என விளக்கியுள்ளார்.
இன்றைய ஆசிரியர்கள் சந்திக்கும் பெரிய சவால் மாணவர் மீதான பெற்றோர் எதிர்பார்ப்பு, அதிகாரிகளின் அழுத்தம். இவ்விரு பிரச்சனைகளுக்கும் நடுவில் மாணவரின் நடத்தை முரண் அனைத்தும் ஆசிரியரை நோக்கியே குற்றம் சுமத்துவது இப்பொழுது நடைமுறையில் உள்ளது. இதனால் ஆசிரியர்கள் குரலற்ற, வலிமை குறைந்தோராக உணரும் அவலம் ஏற்பட்டுள்ளது. மாணவர்-ஆசிரியர் தங்களை ஒருவருக்கு ஒருவர் புறக்கணிப்பது இயற்கைக்கு முரணானது ஆகும்.
மாணவர்களை திட்டக்கூடாது. அடிக்கக்கூடாது. எதுவுமே சொல்லக்கூடாது என்றால் எப்படிதான் படிக்க வைப்பது என்று ஆதங்கப்படும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இப்படிதான் என்று வழிகாட்டும் பொக்கிஷம்...
- ச.மாடசாமி
உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க என்னவெல்லாம் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று இப்புத்தகத்தின் வழியே நாம் அறியும்போது நமக்கு ஏற்படும் கவலை. நம்மை செயலுக்குத் தூண்டுகிறது. கல்வி குறித்த பிரமாண்டமான விவாதத்தைக் கிளப்பும் வல்லமை கொண்ட ஒரு புயல் இப்புத்தகத்தில் மையம் கொண்டுள்ளது.
- ச.தமிழ்ச்செல்வன்