இதோ, பெரியாரில் பெரியார்
இவரைப் பெரியார் ஈ.வெ.ராமசாமி என்று நமது மக்கள் சாதாரணமாக அழைக்கின்றார்கள் என்றாலும், என்னைப் பொறுத்தவரையில் எனக்குப் பெரியார் வேறு - ஈ.வெ.ராமசாமி வேறுதான். ஈ.வெ.ராவுக்கு மாட மாளிகைகள் உண்டு. நூற்றுக்கணக்கான வீடுகளும், நூற்றுக்கணக்கான ஏக்கர் நஞ்சை புஞ்சைகளும் உண்டு. ஓரளவு ரொக்க ரூபாயும் பாங்கியில் உண்டு. ஆனால், பெரியாருக்கு அதெல்லாம் இல்லை. அவ ருக்கு உலகெல்லாம் சொந்த ஊர்தான். உலக மக்க ளெல்லாம் அவருக்குச் சகோதர சகோதரிகள்தான்.
நம் நாட்டிலும் ஏனைய நாடுகளிலும் எத்தனையோ பணக்காரர்கள் உண்டு. அவர்களில் சிலர் தனக்குப் பண மிருக்கிறது என்று மற்றவர் பாராட்ட வேண்டுமென்பதற் காகவே சம்பாதிப்பார்கள். சிலர் பணமூட்டைகளை அடுக்கி அழகு பார்ப்பதற்காகச் சம்பாதிப்பார்கள். இன்னும் சிலர் தமது வாழ்வை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்பதற் காகப் பணம் சம்பாதிப்பார்கள். ஆனால், எந்தப் பணக் காரனும், அவன் எந்நாட்டவனாயினும் சரியே, அவன் தன் சுயநலத்திற்காக, சுய பெருமைக்காகப் பொதுவாழ்வில் ஈடுபடுவானே அல்லாது, தன்னலமற்ற எவனும் பொது வாழ்வில் ஈடுபடமாட்டான். ஆயுள் முடிந்து ஓய்வு பெற வேண்டிய காலத்தில்கூட, தான் சம்பாதித்த பொருளின் முழுப்பயனையும் அடைய முயற்சிப்பானே அல்லாது. தன் எஞ்சிய காலத்தைப் பொது வாழ்வுக்குச் செலவழிக்க இசையான். ஆனால், இவர்களுக்கெல்லாம் மாறுபட்டவர் பெரியார். இவரும் சம்பாதிக்கவேண்டுமென்ற ஆசையோடு தான் ஒரு மனிதனுடைய டாம்பீக வாழ்வுக்குப் போதுமான அளவுக்குப் பணம் சம்பாதித்துவிட்டார். இவருக்கு மனைவி யில்லை. மக்களில்லை. தான் சம்பாதித்த பொருளைக் கொண்டு எடுபிடி ஆள் நாலைந்து பேரை வைத்துக் கொண்டு எவ்வளவோ சுகமாக வாழலாம். எப்படித் தன் பணத்தை வாரி இறைத்தாலும் ஏனென்று கேட்க ஆளில்லை. அப்படி இருந்தும் பெரியார் என்ன செய்கிறார்? அவர் இப்படி சுகவாழ்க்கை அனுபவிப்பதைவிட்டு இத் தள்ளாத வயதில்கூட, தனது நேரம் பூராவையும் பொதுநல ஊழியத்திலேயே செலவழித்து வருகிறார். ஆகவே தான் பெரியாரில் ஒரு பெரியார் என்று இவரை அழைக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய பெரியார் இருந்ததாக உலக சரித்திரம் கூறக் காணோம். நாமும் இவரைத் தவிர வேறோர் பெரியாரைக் கண்டோமில்லை. இனியும் காணப்போவ தில்லை என்பது தான் எனது அபிப்பிராயம் - ஆகவேதான் நான் முதலிலேயே திராவிட நாடு 'அதிர்ஷ்டம்' பொருந்திய நாடு; நாம் அதில் பிறந்திருப்பதால் 'அதிஷ்டசாலி'கள் ஆனோம் என்றேன். ஏனெனில் இத்தகைய ஒரு பெரியாரின் வாழ்நாளில் பிறந்திருக்கும் பேறு பெற்றுள்ளோம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.