இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும்:நா. வானமாமலை
நாத்தழும்பேறியோரே நாத்திகம் பேசுவர், என்றொரு வசைச் சொல் தமிழில் உண்டு. கடவுள் மறுப்பாளர்களை மக்கள் ஏற்கக் கூடாது. அவர்கள் பேசுவதை மக்கள் காது கொடுத்துக் கேடக்க் கூடாது என்பதே இந்த வசைச் சொல்லின் வெளிப்பாடாகும். கடவுள் மறுப்புக் கொள்கை ஒன்றும் தமிழர்களுக்குப் புதிதல்ல. அதைப் போன்றே அவர்களைப் பற்றிய வசைகளும் புதிதல்ல. வரலாறுகள் நிறைய உண்டு. சமணமும் பெளத்தமும் தமிழகத்தை விட்டு ஏன் இந்தியாவை விட்டே துரத்தப்பட்டதும்,அழிக்கப்பட்டதுமே கடவுள் பக்தர்களின் கருணைக்கு சான்றுகளாக உள்ளன.
இந்தியத் தத்துவ வாதிகளில் மிகப்பலர் நாத்திகக் கொள்கையைக் கொண்டவர்கள்.அவர்களுடைய தத்துவத் திறன் உலகிலேயே மிகச் சிறந்தது. உலக நாத்திக இலக்கியத்தில் இந்தியத் தத்துவத்தின் பங்கு மிக முக்கியமானது.இன்றுகூட இந்திய நாத்திகவாதிகளின் தருக்க ரீதியான வாதங்களுக்கு கடவுள்வாதிகள் பதில் சொல்லுவது மிகவும் கடினம்.
-நா.வானமாமலை.