இளைஞர்களே... திராவிடம் பேசுவோம்
இளைஞர்களே... திராவிடம் பேசுவோம்
திராவிடக் கருத்துகளைத் தாங்கி நிறைய புத்தகங்கள் வந்திருக்கலாம். அவையெல்லாம் மாணவர்களும், திராவிடம் குறித்து புதிதாய் வாசிக்க நினைக்கும் இளைஞர்களும் எளிமையாக வாசித்து புரிந்து கொள்ளும்படி இருக்குமா என்று கேட்டால், பெரிய ஆச்சர்யக்குறி தான் தொக்கி நிற்கும். இந்நூல் திராவிட இயக்கம் குறித்து அறிய விரும்பும் இளையோருக்கும், மாணவர்களுக்கும், இதுவரை கழகத்தைப் பற்றி அறிந்திடாதவர்களுக்கும் எளிய வகையில் புரியும்படி புத்தகத்தை வடிவமைத்துள்ளார் தோழர் பி.என்.எம் பெரியசாமி . திராவிடர் இயக்கம் மீதும், தி.மு.க மீதும் ஒவ்வாமையும் வெறுப்பும் உள்ளோர்கூட புத்தகத்தைப் படித்தால் ஒதுக்கி வைக்காததுபோல் தோழர் பெரியசாமி மிகவும் எளிமையான முறையில் எழுதி, பல அறிய தகவல்களுடன் தொகுத்துள்ளார். இளையோருக்கு பரிசளிக்க சிறந்த நூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.