இடஒதுக்கீடு தொடரும் விவாதம்
இடஒதுக்கீடு தொடரும் விவாதம்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
ஏன் இடஒதுக்கீடு அவசியம்? இதனை யாருக்கெல்லாம் தரவேண்டும்? எங்கெல்லாம் தரவேண்டும்? சாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடுகேட்பது சாதியை வளர்ப்பதாகாதா? இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி ஒதுக்கீடு தந்துகொண்டிருப்பது? இப்படி சிலருக்கு மட்டும் சலுகை காட்டுவது சமத்துவம் என்னும் உயர்ந்த அடிப்படை லட்சியத்துக்கு எதிரானதாக அமைந்துவிடாதா? எப்போதோ எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் எப்போதோ ஒரு கமிஷன் அளித்த சிபாரிசை இன்றைய உலகமயமாக்கல் காலத்திலும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது ஏற்படையதுதானா?
இன்றைய கணினி உலகில் இடஒதுக்கீடு தேவையற்றது என்னும் வாதத்தை இன்றும் பலர் ஊடகங்களிலும் பொதுவெளியிலும் முன்வைத்து வருவதைப் பார்க்கிறோம். ஏன் தேவையற்றது என்பதற்கு அவர்கள் முன்வைக்கும் வாதங்களைத் தொகுத்து அதற்குத் தர்க்கரீதியாகவும் தகுந்த ஆதாரங்கள் மூலமாகவும் விடையளிக்கிறார் நலங்கிள்ளி. இடஒதுக்கீடு என்பது சலுகைக் குரல் அல்ல, உரிமைக்குரல் என்பதே நலங்கிள்ளியின் ஆதார நம்பிக்கை.
இடஒதுக்கீடு என்பது கல்வியை, அறிவியலை சனநாயகப்-படுத்துவது, இதன்வழி சமூகத்தின் ஆற்றல்களை எல்லாம் தேசத்தின் வளர்ச்சிக்குப் பாய்ச்சுவதாகும். ஊனப்பட்டு ஒடுங்கிக் கிடக்கும் தகுதிகளையும் திறமைகளையும் வெளிக்-கொணர்வதாகும். எனவே தகுதி-திறமை வேண்டும் என்றால் இடஒதுக்கீடு வேண்டும்.