ஹோமோ டியஸ்
“மனிதர்கள் கடவுளரைக் கண்டுபிடித்தபோது வரலாறு தொடங்கியது. மனிதர்களே கடவுளராக மாறும்போது வரலாறு முடிவுக்கு வந்துவிடும்.”
- யுவால் நோவா ஹராரி
• ஹோமோ சேப்பியன்ஸ் ஹோமோ டியஸாக (லத்தீன் மொழியில் ‘டியஸ்’ என்றால் கடவுள்; ஹோமோ டியஸ் என்றால் மனிதக் கடவுள்) மாறிக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், நமக்கு நாமே எத்தகைய தலைவிதிகளை நிர்ணயித்துக் கொள்ளப் போகிறோம்?
• பரிணாம வளர்ச்சியின் முதன்மை ஆற்றலான இயற்கைத் தேர்ந்தெடுப்புச் செயல்முறையின் இடத்தைச் செயற்கைத் தேர்ந்தெடுப்புச் செயல்முறை எடுத்துக் கொள்ளும்போது மனிதகுலத்தின் எதிர்காலம் எவ்வாறு மாறும்?
• நம்முடைய விருப்பங்களையும் அரசியல் தேர்ந்தெடுப்புகளையும் பற்றி நம்மைவிட அதிகமாக கூகுளும் முகநூலும் தெரிந்து வைத்திருக்கும்போது ஜனநாயகத்தின் நிலைமை என்னவாகும்?
• கணினிகள் மனிதர்களின் வேலைகளைப் பறித்துக் கொண்டு, ‘பயனற்ற வர்க்கம்’ என்ற ஒரு புதிய, மிகப் பெரிய வர்க்கத்தைத் தோற்றுவிக்கும்போது, அரசின் மானிய உதவியோடு வாழும் மக்களை உள்ளடக்கிய நாடுகளுக்கு என்ன நேரும்?
• நம்முடைய சொந்த அழிவு சக்திகளிடமிருந்து இந்த மென்மையான உலகத்தையும் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் நாம் எவ்வாறு பாதுகாப்போம்?
நம்மை அதிர வைக்கின்ற இது போன்ற பல கேள்விகளை நம்மை நோக்கி ஏவி, சுவாரசியமாகவும் சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் அவற்றுக்கு இந்நூலில் விடை காண முயற்சித்துள்ளார் பேராசிரியர் ஹராரி.
21ம் நூற்றாண்டைச் செதுக்கி வடிவமைக்கக்கூடிய இனிய கனவுகளையும் கொடுங்கனவுகளையும் பற்றிய ஒரு வெள்ளோட்டத்தை ஹோமோ டியஸ் எனும் இந்நூல் நமக்குக் கொடுக்கிறது.