இந்து மதமே பார்ப்பனீயம் - பார்ப்பனீயமே இந்து மதம்
சித்தார்த்த கவுதமர் கி.மு. 563ல் சாக்கிய வம்சத்தில் கபிலவஸ்த்துவில் பிறந்தார். அவர் ஒரு இளவரசர். இளவரசருக்குரிய கல்வியை அவர் பெற்றார். ஆரிய சமூகத்தில் அப்போது பரவலாக நிலவிய கொடுமை களையும் ஏழ்மையையும் கண்டு உள்ளம் நொந்தார். 29ஆவது வயதில் தனது குடும்பத் தையும் அரண்மனையையும் ஆடம்பர வாழ்க்கை யையும் துறந்து உண்மையையும் மீட்பையும் தேடி வெளியேறினார்.புத்தர் சாதிமுறையைக் கண்டனம் செய்தார். சாதி முறை இப்போதுள்ள வடிவில் அப்போது இருக்க மாமனிதர் அம்பேத்கர் வரைந்த வில்லை. சாதிகள் நான்கு வர்ணங்களாக இருந்தன.புத்தர் ஒவியம் தீண்டத்தகாத மக்கள் நான்கு வர்ணத்திலிருந்தும் , விலக்கி வைக்கப்பட்டனர். மனிதர்களாகக்கூட அவர்கள் மதிக்கப்படவில்லை. இத்தகைய கொடுங் கோட்பாடுகளை புத்தர் உறுதியாகவும் கடுமையாக வும் எதிர்த்தார். பிராமணர்கள், தாங்கள் மற்றவர் களைவிட உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்வதை அவர் வன்மையாகக் கண்டித்தார்.சாதியை எதிர்க்கும் விஷயத்தில் புத்தர் தாம் போதித்ததைத் தாமே பின்பற்றினார். புத்தர் சாதியை எதிர்த்துப் போதனை செய்தது மட்டுமின்றி சூத்திரர்களையும் தாழ்த்தப்பட்ட சாதியினரையும் பிக்குகள் ஆக அனுமதித்தார், பெண்களையும் பிக்குனிகளாக ஏற்றுக்கொண்டார்.