இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு முதல் பாகம்
1965ஆம் வருட இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் துவங்கிய நாள் மொழிப்போர் தியாகிகள் தினமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று நினைவுகூறப்பட்டது. தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மொழிப் போர் தியாகிகள் தினத்தையொட்டி மாலையில் பொதுக்கூட்டங்களையும் நடத்தினர்.சென்னையில் மொழிப்போர் கூட்டியக்கத்தின் சார்பில் மெரீனா கடற்கரையில் தமிழ் உணர்வாளர்கள் ஒன்றுகூடி, அங்கிருக்கும் வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதற்குப் பிறகு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். 1937-38ஆம் ஆண்டுகளிலேயே பள்ளிக்கல்வியில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்படுவதற்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. போராட்டத்தின் காரணமாக அந்த ஆணை விலக்கிக்கொள்ளப்பட்டாலும், அதற்குப் பிறகும், இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்து அவ்வப்போது போராட்டங்கள் நடந்துவந்தன.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.