கும்பலாசியிலிருந்து கொடுங்கோன்மைக்கு (கிழக்கு பதிப்பகம்)
கும்பலாசியிலிருந்து கொடுங்கோன்மைக்கு (கிழக்கு பதிப்பகம்)
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
தலித் நோக்கில் பாஜக ஆட்சி குறித்த ரவிக்குமாரின் பார்வையை விரிவாகப் பதிவு செய்யும் புத்தகம், 'கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு'. மணற்கேணி வெளியிட்ட இந்நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிடுவதில் கிழக்கு பதிப்பகம் பெருமை கொள்கிறது.
'தமிழகம் மற்றும் இந்திய அளவிலான பல்வேறு சிக்கல்கள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும்' விவாதிக்கும் நூல் என்று இதனைக் குறிப்பிடுகிறார் தொல். திருமாவளவன்.
வகுப்புவாதம், மதவெறி, சாதி ஒடுக்குமுறை, மதமாற்றம், மறுமதமாற்றம், மாடு அரசியல், அம்பேத்கர், நேரு, நரேந்திர மோடி, ரோஹித் வெமுலா என்று பரந்து விரிகின்றன கட்டுரைத் தலைப்புகள்.
எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தையும், தனது கூர்மையான வாதத் திறனாலும் தகுந்த கோட்டுபாட்டுப் பின்புலத்தோடும் அலசுகிறார் ரவிக்குமார். தலித்தியம் மார்க்சியம் இரண்டும் அவருடைய வாதங்களுக்கு ஒளி பாய்ச்சுகின்றன. அதே சமயம், இந்த இரண்டையுமே அவர் தனக்கே உரிய சமரசமற்ற பார்வையுடன் அணுகுகிறார். பிற அரசியல் சிந்தனையாளர்களிடமிருந்து ரவிக்குமார் வேறுபடும் முக்கியமான இடம் இது.