கெளரி லங்கேஷ் மரணத்துள் வாழ்ந்தவர்
கெளரி லங்கேஷ் மரணத்துள் வாழ்ந்தவர்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
கெளரி கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிய எழ்த்துகளை சந்தன் கௌடா தொகுத்து இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருப்பது பாராட்டத்தகுந்தது. கெளரி உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது சந்தேகத்துக்கு இடமில்லாத எண்ணங்கள், சுதந்திரம், மனித நேயம், ஜனநாயகம் ஆகியவற்றைப் பேசும் வாசகர்களைத் தொடர்ந்து சென்றடைந்து கொண்டே இருக்கும். குடிமகனாகவும் சமூக செயல்பாட்டாளராகவும் கட்டாயம் பேச வேண்டியவை என உணர்ந்துள்ள விஷயங்களை, அவரது அக்கறையை அவரது எழுத்துகள் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. அப்படி பேசுவது தனது கடமை என்றும் அவர் நினைத்தார். தங்களது செயல்பாடுகளின்போது உயிரை இழந்து சிறந்த நெறிகளைக் காட்டிய பெண், ஆண் வரிசையில் அவருக்கும் இடம் உண்டு. வாழ்க்கையை நேசித்த அவர் இழந்த உயிர், நெருக்கடியில் முற்றுகையிடப்பட்ட இந்தியாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.
- சக்கரியா