கௌதம புத்தர்
கௌதம புத்தர்
Regular price
Rs. 150.00
Regular price
Sale price
Rs. 150.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
பௌத்த மதத்தின் மரபின்படி இந்நூல் புத்தரின் வாழ்க்கையையும், போதனைகளையும் எடுட்துரைக்கிறது.
இந்திய தேசம் என்றும் நாவலந்தீவு என்றும் கூறப்படுகிற பரதக்கண்டத்திலே, மத்திய தேசத்திலே சாக்கிய ஜனபதத்திலே கபிலவத்து என்னும் அழகான நகரம் ஒன்று இருந்தது. ஒரு காலத் தில் அந்த நகரத்தை ஜயசேனன் என்னும் அரசன் அரசாண்டு வந்தான். அவ் வரசனுக்குச் சிம்மஹணு என்னும் மகன் பிறந்தான். சிம்மஹணுவுக்குச் சுத்தோதனர், சுல்லோதனர், .தோதோதனர், அமிதோதனர், மிதோதனர் என்னும் ஐந்து ஆண் மக்களும், அமிதை, பிரமிதை என்னும் இரண்டு பெண் மகளிரும் பிறந்தனர். இவர்களுள் மூத்த மகனான சுத்தோதனர், தமது தந்தை காலமான பிறகு, அந் நாட்டின் அரசரானார். சுத்தோதன அரசரின் மூத்த மனைவியாரான மஹாமாயா தேவிக்கு ஒரு ஆண் மகவும், இளைய மனைவியாரான பிரஜாபதி கௌதமிக்கு ஒரு ஆண் மகவும், ஒரு பெண் மகவும் ஆக மூன்று மக்கள் பிறந்தனர். மாயா தேவிக்குப் பிறந்த மகனுக்குச் சித்தார்த்தன் என்று பெயர் சூட்டினார்கள். பிரஜாகௌதமைக்குப் பிறந்த மகனுக்கு நந்தன் என்றும், மகளுக்கு நந்தை என்றும் பெயர் சூட்டினார்கள். இவர் களுள் சித்தார்த்த குமாரன் போதி ஞானம் அடைந்து புத்த பகவானாக விளங்கினார். இவருடைய வரலாற்றினை விரிவாகக் கூறுவோம்.
கபிலவத்து நகரத்திலே ஆண்டுதோறும் நடைபெற்ற விழாக் களில் ஆஷாடவிழா என்பதும் ஒன்று. இந்த விழா வேனிற் காலத்திலே ஆறு நாட்கள் கொண்டாடப்படும். இவ் விழாவின் போது நகர மக்கள் ஆடை அணிகள் அணிந்து, விருந்து உண்டு
கபிலவத்து நகரத்திலே ஆண்டுதோறும் நடைபெற்ற விழாக் களில் ஆஷாடவிழா என்பதும் ஒன்று. இந்த விழா வேனிற் காலத்திலே ஆறு நாட்கள் கொண்டாடப்படும். இவ் விழாவின் போது நகர மக்கள் ஆடை அணிகள் அணிந்து, விருந்து உண்டு