காந்தியார் கொலை அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
இந்நூல் மகாத்மா காந்தி இறப்பு பற்றி தந்தை பெரியார் அறிக்கைகளும், மகாத்மா காந்தியின் பேரன் துசார் காந்தி எழுதிய டுநவள மடைட பயனோ ஆங்கில நூலின் முக்கிய பகுதிகளையும் தொகுத்தளித்துள்ளார். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், இந்நூல் காந்தியார் மறைவு – பெரியார் உரை, காந்தியாரை கொன்றவன் பெரிய ஜாதிப் பார்ப்பான், காந்தியார் கொலை, பெரியாரின் தொலைநோக்கு, காந்திக்கு ஞாபகச் சின்னம், காந்தியாரின் மறைவு குடி அரசு , ஆபீஸ் அனுதாப விடுமுறை, காந்தியார் மறைவும் இழப்பும் போன்ற 17 தலைப்புகளைக் கொண்ட ஒரு அதிசய நூல். இந்துமத அமைப்புகள் காந்தியை கொன்ற நாதுராம் வினாயக் கோட்சே என்ற கொடியவனுக்கு நாடு முழுவதும் சிலை வைக்கப் போவதாக அறிவித்துள்ள இக்கால கட்டத்தில் ஒவ்வொருவருடைய கையிலும் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான நூலாகும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.