எனக்குரிய இடம் எங்கே? | ச. மாடசாமி
எனக்குரிய இடம் எங்கே? | ச. மாடசாமி
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
எனக்குரிய இடம் எங்கே? - ச. மாடசாமி
கல்விச் சீர்திருத்தம், கல்விக்கூட சுதந்திரம், மாற்றுக்கல்வி ஆகியவை பற்றி சமீப ஆண்டுகளில் நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன. பள்ளிக்கல்வி பற்றி இப்படி நிறைய கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தாலும், கல்லூரி மாணவர்களைப் பலரும் கண்டுகொள்வதில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பும் நூல் இது! 'ஒரு வகுப்பறை யாருக்குச் சொந்தம்... பேராசிரியருக்கா? மாணவனுக்கா? கல்விக்கூடத்தின் கதாநாயகனாக யார் இருக்க வேண்டும்?’ எனக் கேள்விகளை எழுப்பி விடை தேடுகிறார் அவர். அய்யப்பராஜ் என்ற பேராசிரியரின் பார்வையில் ஒரு நாவல் போல விரியும் இந்த நூல், தங்கள் பணியில் அக்கறையுள்ள அத்தனை ஆசிரியர்களுக்கும் வேதம். அதே சமயம் மாணவர்களுக்கும் தங்களைச் செதுக்கிக்கொள்ள இந்த நூல் வாய்ப்பு தருகிறது. கல்வியில் முழுமை பெற்று, வாழ்வில் தனக்குரிய இடத்தை தேடிக்கொள்வது எப்படி என்பதற்கான வழிகாட்டியாக இந்த நூல் இருக்கிறது. பாதைகளை தேர்ந்தெடுப்பவர்களைத் தாண்டி, பாதைகளை உருவாக்குபவர்களும் இருக்கிறார்கள். எல்லோருக்கும் சிந்தனையின் வாசலைத் திறந்து வைத்துக் காத்திருக்கிறது 'எனக்குரிய இடம் எங்கே?’