எமைத் திருத்தி வரைந்த தூரிகை
எமைத் திருத்தி வரைந்த தூரிகை
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
ஏன் இத்தனை அவசரம்? இதுதான் காலம் என்று அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். பெரியாரின் படைத்தளபதிகள் முடிந்து போய் விட்டார்கள். மிச்சமிருப்பவர்களும் மூப்படைந்து விட்டார்கள். களமாட ஆளில்லை, காலத்தைப் பயன்படுத்து, என்ற பிழையான புரிதலில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள் பழைய எதிரிகள். புதிய எதிரிகளுக்கோ , வரலாறு தெரியாத புதிய தலைமுறை ஒன்று முளைத்திருக்கிறது, அவர்கள் மூளைக்குள் பழைய செய்திகள் எதுவும் பதியமிடப்படுவதற்கு முன்னால், நமது விதையை ஊன்றிவிட வேண்டுமென்கிற அவசரம்.
இது 'பெரியார் மண்' என்று நாம் எப்போதும் போல் அசட்டையாக இருக்கிற காலம் இதுவல்ல. இது பொய்கள் வெற்றி பெறும் காலம். நேற்றைய வரலாறு அறியாத இன்றைய தலை முறையை யார் பயன்படுத்திக் கொள்வது? என்று ஆளாளுக்கு அடித்துக்கொள்ளும் காலம். உண்மையான தரவுகளோ, ஆழமான உள்ளீடுகளோ இல்லாமல், மேம்போக்கான ‘மீம்ஸ்'களின் வழியாகவே ஒரு பொதுக் கருத்துருவாக்கத்தை உண்டு பண்ணி விடுவதற்கு வாய்ப்பும் வசதியும் உள்ள காலம். எல்லாவற்றுக்கும் மேலாய் நம் நிரந்தர எதிரி அதிகார பலம் பெற்றிருக்கும் காலம்.. பெரியார் பண்படுத்திய மண்ணில் எதுவும் நிகழ்ந்து விடாது என்கிற அதீத நம்பிக்கையில் நாம் அமைதியாக இருந்துவிடக் கூடாத காலம். கூடுதலாய் நாம் வினையாற்ற வேண்டிய காலம்.
ஒவ்வொருவர் கையிலும் ஒரு கருவி இருக்கிறது. என் கையில் இருக்கும் கருவி எழுத்து. நிகழ்காலத் தேவையின் பொருட்டு நான் ஆற்றியிருக்கும் வினைதான் இந்நூல்.