‘திராவிட லெனின்’ டாக்டர் டி.எம்.நாயர் (நூல் வரிசை -3/5)
"டாக்டர் டி.எம். நாயர், சர்.பிட்டி. தியாகராய செட்டியாருடன் இணைந்துநின்று பிராமணரல்லாதார் இயக்கத்தைத் தோற்றுவித்த மாவீரர் ஆவார். தோற்றுவித்தது மட்டுமல்ல! திறம்பட இயங்கிவரச் செய்த செயல் வீரருமாவார்! திராவிடரின் நலிந்த வாழ்வை நல்வாழ்வாக்கிய உத்தமர்! சூத்திரரெனவும் பறையரெனவும் தாழ்ந்து நின்ற திராவிட சமுதாயத்தினரை மானமிகு மனிதராக்கிய சமுதாயச் சிற்பி! பிராமணரின் ஜாதிவெறியை அடக்கி, எவரும் சூத்திரன் என்றோ, பறையன் என்றோ உச்சரித்திடவும் அஞ்சும்படி செய்திட்ட அஞ்சா நெஞ்சத்தவர்!
டாக்டர் நாயர், உற்றார் உறவினருக்காகப் பாடுபட்டவரல்லர்! பணம் திரட்டப் பறந்தவரல்லர்! பட்டம் பதவிக்காகத் தொங்கியவரல்லர்! ஈட்டிய பொருளையெல்லாம் திராவிடர்தம் நல்வாழ்வுக்காகவும், அவர்தம் இயக்க வளர்ச்சிக்காகவும் செலவழித்தவர்! செலவழித்துச் இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்! திராவிடர்களின் வருங்கால நன்மைக்காகத் தம்மையே பலியாக்கிக் கொண்டவர்! இத்தகு தியாகச் செம்மலை, குணக்குன்றை, செயல் மறவரை, நாட்டுத் தொண்டரை, தியாகராயரின் நண்பரை இக்காலத் தலைமுறையினர் அறிந்து கொள்வதானது, தமது பரம்பரை வரலாற்றுச் சிறப்பினை அறிந்து கொள்ளும் அரும்பெருஞ் செயலல்லவா!
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.