Skip to product information
1 of 1

நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்

திராவிட இயக்கமும் கலைத்துரையும் (நாடகக்கலை எதிர்கொண்ட கலகங்கள்)

திராவிட இயக்கமும் கலைத்துரையும் (நாடகக்கலை எதிர்கொண்ட கலகங்கள்)

Regular price Rs. 70.00
Regular price Sale price Rs. 70.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

வரலாற்று ரீதியாக, தமிழ் சமூகத்தில் நடந்த முக்கிய மாறுதல்களை பற்றி பேசுகிறது இந்த புத்தகம். கலைகளின் தாக்கம், தமிழ் சமூகத்தில் எப்படி நிகழ்ந்தது என்பதை மிகத் தெளிவாக ஆராய்கிறது. குறிப்பாக நாடகங்களின் சாயல், அவற்றின் வெளிப்பாடு, அவை சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அல்லது மாற்றம் குறித்த தகவல்கள், கடுமையான உழைப்பின் மூலம் தொகுக்கப்பட்டுள்ளன.

திராவிட அரசியல், கம்யூனிச அரசியல் போன்றவை, தமிழர்களிடம் நாடகக் கலைகள் ஊடாக பரவிய விவரம் விவரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரிட்டிஷ் ஆட்சியில் நாடகங்களுக்கு இருந்த தடை பற்றிய விவரங்களும் கொடுக்கப்பட்டு உள்ளன. நாடகக்கலை, கலகங்களை எதிர்கொண்டு எப்படி தன்னை நிலைநிறுத்திக் கொண்டது என்பதை, நுட்பமாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர். அனைத்து பதிவுகளும் ஆதாரங்களுடன் உள்ளன. தமிழக வரலாற்று உருவாக்கத்தில் நாடகக்கலை ஏற்படுத்திய கலகங்களையும், நாடகக்கலை எதிர்கொண்ட கலகங்களையும் பதிவு செய்துள்ள முக்கிய புத்தகம்.

- அமுதன்.

 

பேராசிரியர் மு.இராமசுவாமி “திராவிட இயக்கமும் கலைத் துறையும் - நாடகக்கலை எதிர்கொண்ட கலகங்கள்'' என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூல் தமிழகத்தில் நாடகத் துறையின் வளர்ச்சி பற்றிய சிறந்த ஆய்வு நூலாக உள்ளது, ஆசிரியர் “கலகக்காரர் தோழர் பெரியார்'' என்ற நாடகத்தை உருவாக்கினார். அவரே பெரியாராக நடித்தார்.
தமிழகத்தில் அந்த நாடகம் மக்கள் மத்தியில் ஒரு தாக்கத் தையும், சிந்தனையையும் உருவாக்கியது. நந்தன் கதையையும் நாடகமாக புதிய கண்ணோட்டத்தில் நடத்திக் காட்டினார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை பேராசிரியராகவும் பணி யாற்றினார்.
தமிழ் மக்கள் மத்தியில் நாடகத்திற்கு நீண்ட வரலாறும் பாரம்பரியமும் உண்டு. இயல், இசை, நாடகம் மூன்றையும் இணைத்தே முத்தமிழ் என்ற பெருமை உள்ளது, கூத்தரும், பாணருமே மன்னர்களிடம் மக்களின் குறைகளை எடுத்துக் கூறியதாக வரலாற்றில் இலக்கியச் சான்றுகள் உள்ளன.

View full details