Skip to product information
1 of 3

Nannool Pathippagam

திராவிட இயக்க வரலாறு | Navalar Nedunchezhiyan

திராவிட இயக்க வரலாறு | Navalar Nedunchezhiyan

Regular price Rs. 900.00
Regular price Sale price Rs. 900.00
Sale Sold out
Shipping calculated at checkout.

திராவிட இயக்க வரலாறு - Navalar Nedunchezhiyan

திராவிட இயக்கம் என்பது கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச்சமூகத்தில் தோன்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமூக மற்றும் அரசியல் இயக்கமாகும். இந்த திராவிட இயக்கம் மூலம் தமிழ்ச்சமூகத்திற்கு கிடைத்த சமூக நீதிகளும், கல்வி வாய்ப்புகளும் அளப்பரியது. இதன்மூலம் தமிழ்ப்பண்பாட்டு உணர்ச்சிகளையும், பகுத்தறிவு சிந்தனைகளையும் தட்டி எழுப்பியது. இந்த உணர்வும், எழுச்சியும், மங்கிப்போகாமல் காப்பது நம் கடமை.

இந்தி எதிர்ப்பு, சமூக நீதி, தமிழ்நாட்டிற்க்கான சுயாட்சி, போன்ற அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்வதிலும் திராவிட அரசியல் மிகக்கவனம் பெறுகிறது.

இந்நிலையில் திராவிட இயக்கம் குறித்த வரலாறை நாம் வாசிக்கவும், அதன் சிந்தனைகளைத்தக்கவைப்பதிலும் நமக்கு மிகவும் கடமையாகிறது.

தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், திராவிடத்தத்துவத்தை மேடைகள் தோறும் பரப்புரை செய்தவரும், கட்சி அரசியலில் மாற்றம் கண்டாலும் அடிப்படை திராவிடச்சிந்தனையில் மாற்றம் காணாமல் வாழ்ந்த நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களின் “திராவிட இயக்க வரலாறு” என்னும் நூலை தமிழ்கூறும் நல்லுலகிற்கு எமது நன்னூல் பதிப்பகம் மூலம் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

மிகவும் குறுகிய காலத்தில் நன்னூல் பதிப்பக வெளியீடுகளை பெரிதும் வரவேற்ற தமிழ் வாசகர் உலகம் இதனையும் வரவேற்குமென்று நம்புகிறோம்.

View full details