அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனையும்
அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனையும் - ஏ.எஸ்.கே
'பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ. வெ. ரா.' என்ற நூலை எழுதிக் கொண்டிருந்தபொழுதே டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பற்றியும், தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையைப் பற்றியும், ஒரு புத்தக வடிவத்தில் என் கருத்துகளை எழுத வேண்டும் என்று முடிவு செய்தேன்.
காரணம்: பெரியாரைப்போலவே டாக்டர் அம்பேத்கர் அவர்களும், பகுத்தறிவின் ஒரு சிகரமாவார். தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையையும் பகுத்தறிவின் அடிப்படையில் தான் தீர்க்க இயலுமே ஒழிய, மனிதாபிமானத்தினால் அல்ல.
யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை, எனைத் தோன்றும், தாழ்த்தப்பட்டோர் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை பிற. வறுமையிலிருந்தும், பொருளாதார அடிமையிலிருந்தும், தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை பெற்றனர் என்றால், சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கும் அநீதிகள் அடியோடு ஒழியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.
ருஷ்ய நாட்டில் 1917 -க்கு முன், ஜார் மன்னனுக்கு மக்கள் அடிமையாக இருந்து வந்தனர். லெனின் தலைமையில் புரட்சி வெடித்தது. ஜார் மன்னனாட்சி சடசடவென்று முறிந்தது. மக்கள் அரசியல் விடுதலை பெற்றனர். அரசியல் விடுதலை பொருளாதார விடுதலையுடன் பின்னிப் பிணைந்திருந்தது. எனவே, அரசியல் விடுதலை பொருளாதார விடுதலையாகவும் பரிணமித்தது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.