தலித் பெண்ணின் இடைமறித்தல்கள்
தலித் பெண்ணின் இடைமறித்தல்கள்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் தலைக்கும் வரி; மார்பிற்கும் வரித் தண்டனை; கடவுள் சிலை அமைந்துள்ள தெருவில் நடக்கவே தடை; ஆனால் பார்ப்பனர்கள் கொலையே செய்தாலும் மரண தண்டனை கூடாது (1930 வாக்கில் கூட) - ஏதோ இவையெல்லாம் ஆயிரம் வருடங்களுக்கு முன் நிலவியவை போன்று தோன்றினாலும் நூறு வருடங்களுக்குள் மலையாள தேசத்தில் நிகழ்ந்த கொடுமைகளே. அதன் தொடர்ச்சியே கேரளாவின் முற்போக்கு சக்திகளுக்கு விடப்பட்டுள்ள சவாலாக உள்ள இன்றைய சபரிமலை நுழைவுக்கெதிரான அட்டூழியங்கள். புனிதம் கெட்டுவிடும் என்று
போராட்டம் நடத்துபவர்களிடம் சபரிமலை முன்னால் தந்திரி கண்டரேருவின் கதையையும் (?) காஞ்சி சங்கரன்களின் கதையையும் (?), தேவநாத குருவின் கதையையும் (?) எடுத்துச் சொல்லிப் போராடத்து நம்மைப் போன்றோரின் குறையே ஆகும். அன்றும் இன்றும் கேரள நாட்டின் சனாதனப் பழக்கவழக்கங்கள் மக்களிடையே பாரம்பரியமாகப் (?) புரையோடி உள்ளதன் காரணத்தைப் புரிந்து கொள்ளப் பயன்படக்கூடிய சிறிய பங்களிப்பைத் தரவல்ல நூல் இது.