கால்டுவெல் ஐயர் சரிதம்
கால்டுவெல் ஐயர் சரிதம்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
ரா.பி. சேதுப்பிள்ளை (ராசவல்லிபுரம் பி. சேதுப்பிள்ளை) திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம் இராசவல்லிபுரத்தில் 2.3.1896-இல் பிறவிப்பெருமான்பிள்ளை - சொர்ணம்மாள் தம்பதியினருக்கு பதினோராவது குழந்தையாகப் பிறந்தார்.
தொடக்கக் கல்வியைப் பாளையங்கோட்டை தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், இடைநிலை வகுப்பை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை படிப்பை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் படித்தார். பின்னர் இளங்கலை சட்டம் படித்தார். உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் சுப்பிரமணியம், இந்துக் கல்லூரித் தமிழாசிரியர் சிவராமன் ஆகியோர் சேதுப்பிள்ளையின் தமிழார்வத்தை வளர்த்தவர்கள்.
ரா.பி. சேதுப்பிள்ளை பதினான்கு கட்டுரை நூல்கள், மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள் உட்பட 21 நூல்களை எழுதியுள்ளார். நான்கு நூல்களைப் பதிப்பித்துள்ளார். 'தமிழின்பம்' நூலுக்காக 1955-ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றவர், அதுவும், தமிழ் நூலுக்கான முதல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். தருமபுரம் ஆதீனத்தால் சொல்லின் செல்வர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தால் இலக்கியப் பேரறிஞர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். 25.4.1961இல் தனது 65-வது வயதில் மறைந்தார்.