ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை
ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
பெண்களின் சமத்துத்துவம் பற்றிப் பலரும் பேசுகிறார்கள். இந்த நூல் குறிப்பாகத் திருமண வாழ்க்கையில் பெண்ணின் நிலையைப் பற்றிப் பேசுகிறது. பெண்ணின் வாழ்க்கையில் திருமணம் எவ்வாறு ஒரு திருப்புமுனையாக - இருக்கிறது. திருமணம்தான் அவளுடைய வாழ்க்கை என்று சமூகம் | நினைப்பதன் விளைவு என்ன, இதனால் திருமண வாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சல்கள், அவற்றைச் சமாளிக்க அவர்கள் எவ்வாறு சிரமப்படுகிறார்கள் போன்ற பிரச்சினைகளை ஐந்து | தலைமுறைகளினூடாக இந்நூல் படம்பிடித்துக் காட்டுகிறது , மேலும் திருமணச் சந்தையில் பெண்ணின் உடலழகும், அவள் கொண்டுவரும் பணம், பிறப்பால் வரும் தோலின் நிறம் எந்தளவிற்குத் திசைமாற்றிகளாக இருக்கின்றன, அவளுடைய மனதின் பரப்புக்கும் , அறிவின் தாகத்திற்கும் உரிய மதிப்பு இருக்கிறதா என்னும் புரிதலுக்கு 25 குடும்பங்கள் மூலம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.இதை நாகேஸ்வரி அண்ணாமலை ஆணும் பெண்ணும் ஒன்றல்ல; ஆனால் சமமானவர்கள் எனும் நிலைப்பாட்டில் தமது ஈர்ப்புமிக்க வரிகள் மூலம் முன்னெடுக்கிறார். இதற்காக இவர் அடையாளமிடும் பெண்கள் நாடார் ) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தற்செயலானது இவர்களுடைய நிலை பெரும்பான்மையான பெண்களுக்குப் பொருந்தும் என்பதே உண்மை.
தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதியொன்றில் பிறந்த நாகேஸ்வரி, பெரிய மொழி ஆளுமையான அண்ணாமலையின் மனைவி. இள வயதிலேயே கணவரோடு அமெரிக்கா சென்றவர். தன் குடும்பம், பிள்ளைகளின் எதிர்காலம் என்று அவர் காலத்துப் பெண்கள் பலரையும்போல ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைத்துக்கொண்டிருக்க வேண்டியவர். தன்னுடைய 60-வது வயதுக்குப் பிறகு, திடீரென எழுதத் தொடங்கினார்.
'அமெரிக்காவில் முதல் வேலை', 'அமெரிக்க அனுபவங்கள்', 'அமெரிக்காவின் மறுபக்கம்' என்று அமெரிக்கா பற்றி அவர் எழுதிய புத்தகங்கள் அமெரிக்க வாழ்வு, கலாச்சாரம் சம்பந்தமான தமிழின் முக்கியமான வரவுகளாக அமைந்தன. தொடர்ந்து, 'ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதைகள்', 'பாலஸ்தீன இஸ்ரேல் போர்', 'போப் பிரான்சிஸ்' ஆகிய புத்தகங்களை எழுதினார். அமெரிக்கா தொடர்பாக இங்கு நிலவும் பொது பிம்பத்தை உடைப்பவை நாகேஸ்வரியின் புத்தகங்கள்.