அறிவியலில் பெண்கள் - ஒரு சமூக வரலாற்றுப் பார்வை
நூல்.உலக மக்கள்தொகையில் பாதிப் பேர் பெண்களாக இருக்கின்றனர்.பெரும்பாலும் அவர்கள் குடும்பத்தை மட்டுமே பராமரிப்பவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். ஆனால் சமூகப்படிநிலை வளர்ச்சியில் பெண்களின் பங்கு ஆண்களுக்கு 'நிகரானது. இந்த நூல் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பாதித்த காரணிகளை வரலாற்றினூடே விளக்கி, அவை பாலினப்பாகுபாட்டில் எந்த அளவிற்கு முக்கிய விசையாக் செயல்படுகின்றன என்பதை விவரிக்கிறது. இதன்மூலம் அறிவியலில் முகம் தெரியா பெண்கள், நன்கறியப்பட்ட பெண்கள், அறிவியலைப் பிரபலப்படுத்திய பெண்கள், ஆண்களுக்குத் துணையாக இருந்த பெண்கள் என முந்நூறுக்கும் மேற்பட்ட பெண் அறிவியல் அறிஞர்களை அறிமுகம் செய்கிறது. 1 மேலும் பெண் அறிவியல் அறிஞர்களின் மன, உடல்திறன்கள் நடத்தை ஆகியவை எவ்வாறு அவர்களின் பணியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன, அவற்றை அவர்கள் கையாண்ட விதம், பெண்களின் சுமைகளைக் குறைக்க பெண்ணியவாதிகள் எடுத்துக் கொண்ட முயற்சிகள், வழிமுறைகள் போன்ற தகவல்களையும்வழங்குகிறது. இதனால் இந்நூல் தனது வகைமையில் முதலிடத்தைப் பெறுகிறது. அறிவியல் அறிஞர்களாக இருக்கும் பெண்களும், அவர்களின் ஆற்றலைப் பயன்படுத்துவோரும்.