Skip to product information
1 of 3

அலைகள் வெளியீட்டகம்

அறிவியல் தத்துவம் சமுதாயம் - தேவி பிரசாத் சட்டோபாத்யாயா தமிழில்: அ.குமரேசன்

அறிவியல் தத்துவம் சமுதாயம் - தேவி பிரசாத் சட்டோபாத்யாயா தமிழில்: அ.குமரேசன்

Regular price Rs. 50.00
Regular price Sale price Rs. 50.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

அறிவியல்  தத்துவம் சமுதாயம் - தேவி பிரசாத் சட்டோபாத்யாயா தமிழில்: அ.குமரேசன்

 

பண்டைய இந்தியாவில் சமயச்சார்பின்றி முற்றிலும் உலகியல் சார்ந்ததாக மருத்துவம் இருந்திருக்கிறது என்பதை நூலாசிரியர் மிக விரிவாக விளக்குகிறார். மாயாவாத - மதச்சடங்கு சார்ந்த சிகிச்சை என்பதிலிருந்து பகுத்தறிவு சார்ந்த நிலைக்கு மருத்துவத்துறை முன்னேறுகிறது என்றும்,  புத்தரின் கொள்கைகளை விளக்கும் நூலான  துறவிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து புத்தர் நீண்ட விவாதம் நடத்தியிருக்கிறார். அது நோய்களுக்கான காரணங்களையும், அவற்றுக்கான தீர்வுகளையும் இயற்கைமுறையில் புரிந்து கொண்டதன் அடிப்படையில் அமைந்திருக்கிறது என்கிறார் நூலாசிரியர். ஆயுர்வேத மருத்துவ நூல்களாகிய சரக- சம்ஹிதை மனித உடல்களின் மீது, சுமார் 900 வகையான தாவரங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி கூறுகிறது. சுஸ்ருத சம்ஹிதை 1040 தாவர வகைகளைப் பற்றி கூறுகிறது. உடற்பொருட்களில் சமநிலையை ஏற்படுத்துவதைப் பற்றி \"சரக சம்ஹிதை', \"சுஸ்ருத சம்ஹிதை' ஆகிய இரண்டு நூல்களும் பேசுகின்றன. இவ்வாறு அறிவியல் அடிப்படையில் வளர்ந்து கொண்டிருந்த பண்டைய மருத்துவம் பின்னர் அதே அடிப்படையில் தொடர்ந்து வளர விடாமல் தடுக்கப்பட்டது என்று கூறும் நூலாசிரியர், அதற்கான சமூகப் பின்னணியையும் சுட்டிக்காட்டுகிறார். அறிவியலற்ற கண்ணோட்டத்தில் வளர்ந்த தத்துவப் பார்வைகளையும், அவை சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் புரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது

View full details