அமுத மொழிகள்
அமுத மொழிகள்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
நம் முன்னோர்கள் தாம் கேட்டறிந்தும் அனுபவத்தின் வாயிலாகவும் பலதுறை சார்ந்த பழமொழிகளையும் பொன்மொழிகளையும் அறிந்து வைத்திருப்பர். அவை. சமயப்பெரியோர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், நாடுபோற்றும் தலைவர்கள், ஆன்மீகவாதிகள் போன்றோர் கூறியுள்ளனவே ஆகும். நாம் இதுகாதும் கேட்டும் படித்தும் இராத பொன் மொழிகளைப் பொருள் உணர்ந்து கற்று நம் வாழ்க்கையில் இயன்ற அளவு கடைப்பிடிக்கலாம். நமது வாழ்க்கை அமையும் நாம் அறிந்து கொள்ளும் பழமொழிகளும் அமுதமொழிகளும் எப்போதும் நமக்குத் துணைநிற்கும்.
* ஒரு செயலைக் குறிப்பிட்ட லாபம் கருதிச் செய்கிறீர்கள் , ஆனால் அதில் எதிர்க்கார்த்த லாபம் கிடைக்கவில்லையெனில் அதனால் கலக்கத்துடன் இருக்காதீர்கள். யார் லாபம் பெறும் போது அதிக இன்பமும் நட்டத்தின்போது துன்பமும் இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களே மனிதர்களில் உயர்ந்த குணமுள்ளவர்கள் ஆவர். மகாவீர்.
* சினத்தை விட்டவன் நாளும் துன்பப்படுவதில்லை. பேராசையை விட்டவன் பேரின்பம் அடைவான். சிவானந்தர்.
* உழைக்காதவனுக்கு ஒன்றுமே கிடைக்காது அவனைக் கடவுளும் வெறுத்துவிடுவார் என்பதை மறவாதே.சுத்தானந்த பாரதி.
* நீங்கள் வருத்தமின்றி வாழ விரும்பினால் கள், காமம், கொலை களவு, பொய், ஆகியவற்றை அண்டவிடாதீர்கள். வள்ளல் பெருமான்.