ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் - சு.பொ.அகத்தியலிங்கம் (ஆசிரியர்)
ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் - சு.பொ.அகத்தியலிங்கம் (ஆசிரியர்)
ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் என்கிற இந்தப் புத்தகத்தில் மகா பாரத காந்தாரியைச் சுட்டிக் காட்டி ஒரு காலத்தில் ஆப்கன் வரை இந்தியா வியாபித்திருக்கக்கூடும் என இந்நூலாசிரியர் கூறுவதையும் இணைத்துப் பார்க்கிறபொழுது இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் கூறியது ஆப்கனுக்கும் பொருந்துவதைக் காண முடிகிறது. உள்நாட்டுப்போர்கள் , படையெடுப்புகள் , புரட்சிகள் , வெற்றிகள், பஞ்சங்கள் எல்லாம் சிக்கலாகவும் விரைவுடனும் நாசகராமகவும் தோற்றம் தந்தாலும் ஹிந்துஸ்தானத்தில் அவை மேல்மட்டத்தைவிட கீழே ஆழ்ந்து செல்லவில்லை. இந்திய சமுதாயத்தின் முழு அமைப்பையும் பிரிட்டன் குலைத்துவிட்டது. இந்தியாவில் முஸ்லீம்களும் இந்துக்களும் மட்டுமல்ல சாதியோடு சாதி பழங்குடியினரோடு பழங்குடியினரும் பிரிந்து நின்று மோதிக்கொள்கின்றனர். இவ்வாறு 1853 ஆம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் எழுதினார். ஆப்கன் வரலாறும் இன்றும் அப்படித்தான் படையெடுப்புகள், பழங்குடியின் மோதல்கள் என சோக சித்திரமாக உள்ளது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.