ஆண்டாள் ஆன்மீகம் அரசியல்
ஆண்டாள் ஆன்மீகம் அரசியல்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
ஆண்டாள் ஆன்மீகம் அரசியல்
கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றி விதந்தோதி எழுதிய ஓர் ஆய்வுக்கட்டுரையில் ஆண்டாள் தேவரடியாளாக இருந்தவர் என்று சொல்லப்பட்ட ஓர் ஆய்வுக்குறிப்பை மேற்கோள் காட்டிஎதற்காக அவருக்கெதிராகப் பெரும் சர்ச்சைகள் உருவாக்கப்பட்டன.
ஊடகங்களில் இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கக்கிய விஷத்தில் வைரமுத்து உண்மையில் என்ன சொன்னார் என்பது மறைக்கப்பட்டுவிட்டது. மாறாக, அவர் ஆண்டாளை அவமானப்படுத்தினார் என்கிற பொதுக்கருத்தியல் கட்டமைக்கப்பட்டது.
பின்நவீனத்துவ திராவிட இயக்க ஆய்வாளர் ராஜன் குறை முகநூலில் வைரமுத்து கட்டுரையை முன்வைத்து பக்தி இயக்க மரபின் பின்புலத்தில் வைரமுத்து மீதான விமர்சனங்கள் எவ்வளவு அபத்தமானவை என்பதை தொடர் பதிவுகளாக எழுதினார். வைரமுத்துவின் கட்டுரை வரலாற்றின் வெளிச்சத்தில் ஆண்டாளை எவ்வாறு நேர்மையாகவும் தரவுகள் சார்ந்தும் மனச்சாய்வுகள் அற்று நிறுவுகிறது என்பதை அப்பதிவுகளில் சுட்டிக்காட்டினார்.