Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

வரலாற்றில் பெண் கொடுமைகள்

Original price Rs. 0
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Current price Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

இமயவரம்பன் அவர்கள் தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், "பார்ப்பனர்கள் சூழ்ச்சி யும் மன்னர்கள் வீழ்ச்சி யும்" என்ற தலைப்பில் விடுதலை நாளேட்டில் 1958-இல் தொடர்ந்து எழுதி வந்தார். பின்பு அது புத்தக வடிவத்திலும் வெளிவந்துள்ளது, தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த காலம் வரை அவருக்கு உதவியாளராக இருந்து அய்யாவின் சிறுநீர் வாளியைச் சுமந்தவர் இவரே. அய்யாவிற்குப் பிறகு இயக்கத்திற்கு தலைமை ஏற்ற அம்மா அவர்களுக்கும், அம்மா அவர்கள் மறைவுற்ற பிறகு பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற தமிழர் தலைவர் அவர்க ளுக்கும் நம்பிக்கைக்குரிய உதவியாளராக பணி ஆற்றினார். திருச்சியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு தாளாளராகப் பணிபுரிந்து கல்வி நிறுவனங்களில் பெரும் பங்காற்றினார். புலவர் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் பகுத்தறிவுத் துறவியாக வாழ்ந்து 9.8.1994 அன்று மறைவுற்றார். புலவர். கோ. இமயவரம்பன் பற்றி 'தந்தை பெரியார் கூறியதாவது: "கழகத் தொண்டிற்கு ஆதரவளிக்கவும், தொண்டாற்றவும். இன்று பல தோழர்கள் இருந்தாலும், முழு நேரத் தொண்டர்களாக இன்னும் சிலபேர் வேண்டி இருக்கின்றனர். இப்போது தோழர் இமயவரம்பன் (புலவர் பரீட்சை பாஸ் செய்தவர்) மாதம் 150 ரூபாய் வரை சம்பள வருவாயை விட்டு தனது குடும்ப பெரிய சொத்து நிருவாகத்தையும் விட்டு மற்றும் பல பணத்தோடு வரக்கூடிய சவுகரியத்தையும் தள்ளிவிட்டு, வீட்டிலிருந்து பணம் தருவித்து செலவு செய்து கொண்டு கழகத்துக்கு ஒரு வேலை ஆளாக 3,4 ஆண்டுத் தொண்டாற்றி வருகிறார்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் கோ.இமயவரம்பன்
பக்கங்கள் 44
பதிப்பு முதற் பதிப்பு - 2013
அட்டை காகித அட்டை