வாழ்வியல் சிந்தனைகள் - 14
Save 0%
Save %
Original price
Rs. 200.00
-
Original price
Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00
-
Rs. 200.00
Current price
Rs. 200.00
| /
‘வாழ்வியல் சிந்தனைகள்’ தொகுதி-14 திராவிடர் கழக பவள விழாவையொட்டி 75 கட்டுரைகளின் இனிய தொகுப்பாக இப்போது வெளியிடப்படுகிறது.
எனக்கே மிகப்பெரிய வியப்பு; ‘விடுதலை’ நாளேட்டின் இரண்டாம் பக்கத்தில் ‘சிறுதுளிகளாக’ பல நாட்களில் வெளிவந்த கட்டுரைகளே இவை; இன்றோ இப்புத்தகத்தைப் பார்க்கையில் - படிக்கையில் ‘பெருவெள்ளமாகவே’ - பெருக்கெடுத்து ஓடுகிறது!
காரணம் இதற்கு நமது வாசக நேயர்களிடையே கிடைத்த அபாரமான வரவேற்புதான்.
என்னை மேலும் வாழ்வியல் பற்றி சிந்திக்க வைத்தது.
கருத்து வடிவம் மட்டும் போதாது; இதன் நோக்கம் செயல் வடிவமாக படித்தபின் - அவை மாறவேண்டும். அப்போதுதான் வாழ்வியலில் ஒரு சிறந்த புதிய சாதனைகளைச் செய்யமுடியும்.
தன்னம்பிக்கை, ஆக்கபூர்வச் சிந்தனை, எளிமை எவரையும் சங்கடப்படுத்தாமல் கூடுமானவரை யதார்த்தமான அணுகுமுறையினால் நம் வாழ்வில் ஏற்படும் கசப்பான அனுபவங்களைக் கண்டு மருண்டோடுவதை, மனங்குலைவதைவிட பாடமாக எடுத்துக் கொண்டால் பக்குவம் வளரும். வெற்றி நம் கதவுகளைத் தட்டும்.
மானிடப் பற்றை - வளர்ச்சிப் பற்றை - அறிவுப் பற்றை - மிகவும் குறியாய் வைத்து வழிகாட்டியவர் எனது அறிவு ஆசான் தந்தை பெரியார்.
“மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபடவேண்டும். மற்ற உயிர்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற வேண்டும். மக்களிடத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் - ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி வாழ்வுக்கு வகை தேடவேண்டும். இதுதான் எனது ஆசை.” - தந்தை பெரியார்
‘குடிஅரசு’ வாரஏடு 07.08.1938
அவருடைய அறிவு உளியில் செதுக்கப்பட்டவன் யான்.
அதன் விளைவே இந்த வாழ்வியல் சிந்தனை என்ற சிறு ஒளி விளக்கு.
வெளிச்சத்தைப் பயன்படுத்தி அறியாமை இருட்டை விரட்டுங்கள். இருட்டில் நடக்க இவ்விளக்குத் துணையாக அமையின் அதைவிட இதற்கு வேறு தனி மகிழ்ச்சி உண்டா?
“நம்மால் முடியாதது வேறுயாராலும் முடியாது;
வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!”
என்பது தளராத தன்னம்பிக்கையின் உறுதிப்பாடு.
பயன்பெறுங்கள்.
கி. வீரமணி
ஆசிரியர்
முகாம் சிங்கப்பூர்
28.11.2019