Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

Original price Rs. 0
Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Current price Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00

பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனியின் மொழிபெயர்ப்பாளராக (துபாஷி) புதுச்சேரியில் பணிபுரிந்த ஆனந்தரங்கப்பிள்ளை 1736 முதல் 1761 வரை, கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் எழுதிய நாட்குறிப்பு 18ஆம் நூற்றாண்டு இந்தியாவைப் புரிந்துகொள்ள உதவும் முதன்மையான ஆவணங்களில் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது. அரசியல், நிர்வாகம், பொருளாதாரம், சமூகம் என்று தொடங்கி அன்றைய காலகட்டத்து நிகழ்வுகள் பலவற்றை ஆனந்தரங்கப்பிள்ளை மிகக் கவனமாகவும் விரிவாகவும் பதிவு செய்திருக்கிறார்.

தரவுகளுக்காக மட்டுமின்றித் தனித்துவமான இலக்கிய நயத்துக்காகவும் ஆனந்தரங்கரை ஒருவர் வாசிக்கலாம். பேச்சு வழக்கில் சரளமாகவும் சுவையாகவும் அவர் பகிர்ந்துகொள்ளும் சாதாரண, அன்றாடச் செய்திகள்கூட இன்று வாசிக்கும்போது திகைப்பூட்டுபவையாக இருக்கின்றன.

கோ. செங்குட்டுவன் இந்நூலில் ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகளிலிருந்து சுவையான, நுணுக்கமான, முக்கியமான பல பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அதே நடையில் அளிக்கிறார். ஒவ்வொரு பகுதிக்கும் தகுந்த பின்னணிக் குறிப்புகள் இடம்பெற்றிருப்பதால் ஆனந்தரங்கரின் பதிவுகளைத் தெளிவாக நம்மால் புரிந்துகொள்ளவும் ரசிக்கவும் முடிகிறது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் சுபாசு
பக்கங்கள் 256
பதிப்பு இரண்டாவது பதிப்பு - 2017
அட்டை காகித அட்டை