தத்துவத்தின் வரலாறு:Alan Woods
தத்துவத்தின் வரலாறு
ஒவ்வொருவருக்கும் ஒரு "தத்துவம்" இருக்கிறது என்று கூறினால் வியப்பாக இருக்கும். ஏனென்றால் தத்துவம் என்பது ஒருவர் உலகைப் பார்க்கும் முறையாகும், உலகைப் பற்றிய ஒருவரின் கண்ணோட்டமாகும். நம் எல்லோருக்கும், எது சரி, எது தவறு, எது நல்லது எது கெட்டது என்று பிரித்துப்பார்க்கத் தெரியும் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். இருப்பினும், இவையெல்லாம் மிகவும் சிக்கலான பிரச்சனைகளாகும். இவை வரலாற்றில், மாபெரும் மனிதர்களின் சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பிரச்சனைகளாக இருந்துள்ளன...
... நான் எந்த ஒரு தத்துவத்தையும் பின்பற்றுவதில்லை என்று பிடிவாதமாகக் கூறும் ஒருவர், தவறாகவே அப்படிக் கூறுகிறார். இயற்கை வெற்றிடத்தை வெறுக்கிறது என்று கூறப்படுகிறது. தர்க்கரீதியாகவும் தெளிவாகவும் ஒரு தத்துவார்த்தக் கண்ணோட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளாதவர்கள், தவிர்க்க இயலாமல் அவர்கள் வாழுகிற சமுதாயம் மற்றும் சமூகச் சூழலின் கருத்துகளையும் தப்பெண்ணங்களையுமே பிரதிபலிப்பார்கள். குறிப்பிட்ட சூழமைவில், செய்தித்தாள்கள், தொலைகாட்சி, திருச்சபை முற்றம் அல்லது பள்ளி வகுப்பறை ஆகியவற்றிடமிருந்து உள்வாங்கிக்கொள்ளும் கருத்துகள்தாம் அவர்களுடைய மூலைகளில் நிரம்பிக் கிடக்கின்றன. அவை நிலவும் முதலாளித்துவ சமுதாயத்தின் நலன்களையும் ஒழுக்கத்தையும் விசுவாசத்துடன் பிரதிபலிக்கின்றன.