தமிழர் மரபில் தாய்த் தெய்வ வழிபாடும் பெரியாரும்
தமிழர் மரபில் தாய்த் தெய்வ வழிபாடும் பெரியாரும்
முதலாளியத்தின் தோல்வி என்பது நீதி ஜனநாயகம், சமத்துவம், சுதந்திரம் மற்றும் சூழலியல், அறிவாற்றல் ஆகிய எல்லாவற்றின் சமூகத் தோல்விகளே ஆகும். எனினும், பிரதான ஊடகங்களும், அரசியல்வாதிகளும், கல்வியாளர்களும், முதலாளிமே உகந்த முறைமை என்றும் அந்த முறைமையை தொடர வேண்டும். இன்னமும் பலப்படுத்தப்பட வேண்டும் : கொண்டாடப்படவும் வேண்டுமெனவும் பிடிவாதமாக கூறி வருகிறார்கள். முதலாளியத்தின் அமைப்புமுறைத் தோல்விகளை உண்மையில் அனுபவிக்காதவர்கள் போல் அவர்கள் தங்களின் சித்தாந்த பணிகளை மட்டும் மேற்கொள்கிறார்கள்.
இதற்கு மாற்றீடாக வேறேந்த முறைமைகளும் இல்லை அல்லது அப்படியே ஒன்றிரண்டிருந்தாலும் அவையும் அதாவது அந்த முறைமைகள் விவாதிப்பதற்கோ அல்லது அவை பற்றி பேசுவதற்கோ கூட தகுதி இல்லாதவை என்ற நினைப்பிலேயே அவர்கள் கடந்து போய் விடுகிறார்கள் அப்படியே முதலாளியத்தின் பிரச்சினைகள் என சிலவற்றை தப்பித் தவறி ஒப்புக் கொண்டாலும், அவற்றையும் கூட நிதி மற்றும் வரவு செலவு கொள்கையை அஸ்திரமாக கையில் எடுத்துக் கொண்டு அதிலுள்ள சில சாதகமான அம்சங்களை அப்பிரச்னைகளைத் தீர்க்க போதுமானதானவையாக முன்னிறுத்தி விரிவுரை விளக்கவுரைகளெனும் மலைத் தொடருக்கடியில் சாமர்த்தியமாக புதைத்தும் விடுகிறார்கள். முதலாளிய முறையை கேள்விக்கு உட்படுத்தும் காரியம் மாத்திரம், பிரதான கல்வியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடையே மட்டுமின்றி இவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மத்தியிலும் நிகழாது அப்படியான உரையாடல்கள் கூட அப்படியே அமுக்கப்பட்டுவிடும்.