பெரியார் இன்றும் என்றும்:பெரியார்
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மனிதனும் அவனவன் வாழ்வில் முற்போக்கும், மாறுதலும் அனடந்துகொண்டே வருகின்றான். இதற்காகத் தனி இலட்சியம் தேவையில்லை, மரக்கட்டை போல் உணர்ச்சியற்றவனாய் இருந்தாலும் அவன்கூட காலப்போக்கில் தானாகவே மாறுதலும் முற்போக்கும் அடைந்துதான் தீருவான். ஆனால், அப்படிப்பட்ட விஷயங்களில் நம்போன்றவர்கள் செய்யும் விசேஷகாரியம் என்னவென்றால், எப்படிப்பட்ட மாறுதல் எப்படிப்பட்ட முற்போக்கு அவசியம் என்பதில் செலுத்தும்கவனமேயாரும், கலியாணம், இழவு. வாழ்வு முதலிய துறைகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் சுயமரியாதை இயக்கத்தான் என்று முழுவதும் கூறுவது தகாது. காலதேச வர்த்தமானம் மக்களை அப்படிக் காலத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளச் செய்கின்றது. அதில் சிலவற்றிற்குச் சுயமரியாதை இயக்கம் துணை புரிந்தது என்று சொல்லலாம்.