பெண் எனும் பொருள்
பெண் எனும் பொருள்(விற்பனைக்கு: பெண்கள்,குழந்தைகள்):
நான் இந்த நூலை எழுதி முடிப்பதற்குள், இடையிடையே நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்டவர்களை நான் சந்தித்து உரையாடி அவர்களின் கதைகளைக் கேட்டபோது அவர்கள் எனக்கு ஆசையாய் கொடுத்த நினைவுப் பரிசுகளையும், வரைந்து கொடுத்த சித்திரங்களையும், அவர்களின் புகைப்படங்களையும் பார்த்து நெகிழ்ந்திருப்பேன். குவாதமலாவில் நான் சந்தித்த ஒரு சிறுமி எனக்காக சன்னமான கம்பியில் மரச்சக்கைகளைக் கொண்டு செய்து கொடுத்த ஒரு ஜோடிச் சின்ன காதணிகள் - அரிசோனாவில் குழந்தை வழி ஆபாசப் படைப்புகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட சிறுவன் டானி எனக்கு வரைந்து கொடுத்த ஓவியம்… இப்படி நிறைய…
உலகில் இன்றைய தேதியில் சுமார் 20 மில்லியன் முதல் 30 மில்லியன் வரையிலான எண்ணிக்கையில் அடிமைகள் இருப்பதாகவும் ; உலகளவில் நடைபெற்று வரும் ஆட்கடத்தலில் 80 சதவீதம் பாலியல் சுரண்டலுக்காகவும், 19 சதவீதம் கட்டாய உடலுழைப்புக்காகவுமாக உள்ளதாகவும் மற்றும் சர்வதேச அளவில் மனிதக் கடத்தல் சட்டவிரோத வர்த்தகம் ஆண்டுக்கு $32 பில்லியன் அளவுக்கு இலாபம் குவிப்பதாகத் தெரிய வருவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எதோ இதெல்லாம் கம்போடியாவிலும், கொலம்பியாவிலும் தானே என்று அலட்சியப்படுத்தி விட முடியாது.; கூடவும் கூடாது. நம்மூரில், நம்ம தெருவில் கூட பெண்களைத் தொடரும் அந்த ‘பணம் தின்னிப் பிசாசுகள்.’ இருக்கலாம்; எந்த உருவத்திலும், எந்த ஒரு உறவுமுறையிலும் இருக்கலாம்”