பாரிஸ் கம்யூனில் பெண்கள்
பாரிஸ் கம்யூனில் பெண்கள்
“ கம்யூனிசம் இல்லாமல் பெண்களின் விடுதலையை நினைத்துப் பார்க்க முடியாது என்றால், கம்யூனிசத்தையும் பெண்கள் விடுதலை இல்லாமல் நினைத்துப் பார்க்க முடியாது” என்று 1917 ரசியப் புரட்சியின் பெண்கள் துறையின் முதலாவது தலைவர் இனஸ்ஸா அர்மான்ட் கூறியுள்ளார். ஏனென்றால் சமூக மாற்றம் என்பது மக்கள் தொகையின் சரிபாதிக்கும் மேற்பட்டவர்களாக இருக்கும் பெண்களின் பங்கேற்பு இன்றி சாத்தியமில்லை என்பது அனைவரும் அறிந்த ஓர் உண்மையாகும். வரலாற்றில் பெண்கள் சமூக விடுதலை இயக்கங்களில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளார்கள் என்றாலும், இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளில், இன்று வரை அத்தகைய இயக்கங்களில் பங்கேற்கும் பெண்களின் எண்ணிக்கை பெரும்பாலும் மிகவும் குறைவாகவே இருந்துவருகிறது. நிலவும் சமூக அமைப்பு பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைப்பதில், ஆணின் கரங்களோடு கட்டிபோட்டு வைப்பதில் பெரிதும் வெற்றி கண்டுள்ளது. இந்நிலை மாறவேண்டும். இதுகுறித்துப் பெண்கள் மத்தியில் விவாதங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.