மார்க்சும் சூழலியலும்
'உண்மையான உழைப்பு என்பது மனிதனின் தேவைகளை நிறைவு செய்வதற்காக இயற்கையைத் தனதாக்கிக் கொள்வதாகும், இந்த நடவடிக்கை மூலம் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உயிர்ப் பொரு ளாக்கச் செயல்பாடு இணைக்கப்படுகிறது'' என மார்க்ஸ் எழுதினார். அதன் பொருள், வளத்தைப் படைக்கும் இயற்கைக்குச் சொந்தமான ஆற்றலிலிருந்து பிரிந்து மனிதனின் உண்மையான உழைப்பு நடவடிக்கை எப் பொழுதும் தனித்திருக்க முடியாது, "ஏனென்றால் பருப் பொருள் சார்ந்த வளம், பயன் மதிப்புகளின் உலகம், உழைப் பால் மாற்றியமைக்கப்பட்ட இயற்கையின் பருப்பொருள் களையே கொண்டுள்ளது.” மனித வரலாற்றை நாம் உருவாக்கினோம், இயற்கையின் வரலாற்றை நாம் உருவாக்கவில்லை. தொழில்நுட்பம் இயற்கையுடனான மனிதனின் செயல் உறவை வெளிப் படுத்துகிறது, அவனுடைய வாழ்வை உற்பத்தி செய்யும் நேரடி நிகழ்வுப்போக்கை வெளிப்படுத்துகிறது, அதன்மூலம் அவனுடைய வாழ்வின் சமூக உறவுகளை உற்பத்தி செய்யும் நிகழ்வுப்போக்கையும், அந்த உறவுகளிலிருந்து பெருக் கெடுக்கும் மூளை சார்ந்த கருத்தாக்கங்களையும் வெளிப் படையாகக் காட்டுகிறது.