
கடவுளின் கதை
“கடவுளின் கதை" யானது நம்பிக்கை, நம்பிக்கையின்மை எனும் இரண்டும் சேர்ந்தது. நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே பழைய கடவுள்களுக்கும் புதிய கடவுள்களுக்கும் இடையிலே மோதல், அந்தக் கடவுள்களுக்கு நம்பிக்கை அடிப்படையில் மட்டுமல்லாது அறிவின் அடிப்படையிலும் நியாயம் வழங்க செய்யப்பட்ட முயற்சிகள், அவற்றில் எழுந்த முரண்கள், ஏகக் கடவுளைக் கொண்டுவரத் துடித்த தீவிரம், ஆனால் அதற்கு பல கடவுள்காரர்களே தெரிவித்த கடும் எதிர்ப்பு, அப்படிக் கொண்டுவரப் பார்த்தபோது கடவுளின் இருப்பு பற்றியே சந்தேகத்தைக் கிளப்பிய நாத்திகர்கள் என்று கடவுளின் கதையானது நெடியதாகவும், பன்முகப்பட்டதாகவும், சுவையானதாகவும் இருந்தது. ஆதிமனிதன் யுகம், ஆண்டான் யுகம் எனும் இரு யுகங்களைத் தாண்டு வதற்குள்ளாகவே நூல் பெரிதாகிப்போனதால் இரண்டு பாகங்களாக எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டு அதில் முதலாவது இப்போது உங்கள் கையில்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.