ஜீவிய சரித்திர சுருக்கம் (தடாகம்):Ve.Prabhakaran
தலித் விடுதலைக்காகப் போராடிய தலைவர்கள் பலரைப் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே பரவியிருப்பினும் அவர்கள் அனைவரைப் பற்றிய வரலாறுகள் எழுதப்படவில்லை. விதிவிலக்காக எழுதப்பட்ட தலைவர் சிலரின் வரலாறுகளும் முழுமை பெறவில்லை.
அன்றைய சென்னை மாகாணத்தில் வசித்த திராவிட தலித்துகளும் அவர்களின் இன்றைய வாரிசுகளும் பெற்றிருக்கும் முன்னேற்றத்தில் மிக முக்கியப் பங்காற்றிய தலித் தலைவர்களாக எம்.சி.ராஜா, இரட்டைமலை சீனிவாசன், ஆர். வீரையன் போன்றோரைக் கூறலாம்.
இரட்டைமலை சீனிவாசன் இரண்டு நூற்களும் சில துண்டறிக்கைகளும் பத்திரிகைகளுக்கு கடிதங்களும் எழுதினார். அவர் தன் வரலாற்றை தலித் விடுதலை இயக்கத்தோடு இணைத்து எழுதிய “திவான் பஹதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஜீவிய சரித்திர சுருக்கம்” நூல் 1939ஆம் ஆண்டு வெளியானது.
“ஒளிநகல் (ஜெராக்ஸ்) வசதி இல்லாத 25 ஆண்டுகளுக்கு முன்பு, இந்நூல் போன்ற பல நூல்களைத் தட்டச்சு செய்து வைத்திருந்தவர் அறிஞர் கோ. தங்கவேலு ஆவார். அவர்தான் ஜீவிய சரித்திர நகலை எனக்கு வழங்கினார்” என முன்னுரையில் வே. பிரபாகரன் கூறுகிறார்.
இந்நூல் இரட்டைமலை சீனிவாசன் அவரிகளின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது.