
எங்களை தனி நாடு கேட்கத் தள்ளிவிடதீர்கள்
எங்களை தனி நாடு கேட்கத் தள்ளிவிடதீர்கள் - ஆ.இராசா எம்.பி.,
******
தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு விட்டு திராவிட முன்னேற்றக் கழகம் 'மாநில சுயாட்சி' கொள்கைக்கு வந்துவிட்டது. ஆனால் எங்கள் தத்துவத்தின் பிதாமகனாக இருக்கக்கூடிய தந்தை பெரியார் சாகும் வரை தனித் தமிழ்நாடு கேட்டார். அவர் இறப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்னால், செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்தநாளன்று 'விடுதலை'யில் ஒரு அறிக்கை எழுதினார்.
அதில் கூறினார்: “திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை மாநில சுயாட்சியோடு சுருக்கிக் கொண்டது, ஆனால் நான் சொல்கிறேன் பிரிவினை வேண்டும், தனித் தமிழ்நாடு வேண்டும், இளைஞர்களே முன் வாருங்கள், சுதந்திரத் தமிழ்நாடு தான் வேண்டும் என்று சட்டைப் பையில் பேட்ஜ் குத்திக் கொள்ளுங்கள்” என்று பெரியார் கூறினார்.
இந்த மேடையிலே எங்களது தலைவரை வைத்துக் கொண்டு சொல்கிறேன், அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர், எங்களை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டு விடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.