போக்கன் முதல் மார்க்ஸ் வரை
மக்களை மாபெரும் சக்தியாக மாற்றுவதற்குப் புரட்சிகரமான மார்க்சியத்தைப் பரந்துபட்ட உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஒன்றுதான் இச்சிறு நூல்.
மார்க்சியம் ஒரு மதம் அல்ல. அது அனைத்துக்கும் தீர்வைத் தன்னிடத்தில் தயார் நிலையில் வைத்துள்ளது எனத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் வறட்டுக் கோட்பாடு அல்ல. மார்க்ஸ் அவருடைய காலப் பிரச்சினைகள், வருங்காலப் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வுகளைக் கூறிவிட்டுச் செல்லவில்லை . மாறாக, மார்க்சியம் ஓர் அறிவியல் தத்துவம். இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றில் இடம்பெற்று வரும் அனைத்து மாற்றங்களையும் வளர்ச்சி களையும் இயங்கியல் பார்வையில் ஆய்வுக்குட்படுத்தி அதன்மூலம் தன்னை வளர்த்துக் கொள்ளும், செழுமைப் 'படுத்திக் கொள்ளும் தத்துவம். வரலாற்றோடு வளர்ந்து வரும் தத்துவம்.