ஆன்டன் செக்காவ் அகச் சிறந்த கதைகள்
பிரஞ்சு, தமிழ், ஆங்கில மொழிகளுக்கிடையே மொழிப்பாலம் அமைத்து வரும் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் (1963), புதுச்சேரியில் பிரஞ்சுப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சுவிட்சர்லாந்து பிரஞ்சு எழுத்தாளர் ‘பிலேஸ் சாந்த்ரார் படைப்புகளில் விலகித்தப்புதல்’ எனும் ஆய்வினை முடித்து பிரஞ்சு மொழியில் முனைவர் பட்டம் பெற்றவர்.
குறுந்தொகையை முழுமையாக பிரஞ்சு மொழியாக்கம் செய்துள்ளவர். தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள் முதலியவற்றை பிரஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளில் மொழியாக்கம் செய்துள்ளவர்.
காலச்சுவடு பதிப்பில், ஹினெர் சலீமின் அப்பாவின் துப்பாக்கி எனும் பிரஞ்சுப் புதினத்தைத் தொடர்ந்து, நோபல் பரிசுபெற்ற லெ கிளெஸியோவின் சூறாவளி (‘அடையாளம் தேடி அலையும் பெண்’ உள்ளிட்ட இரண்டு குறு நாவல்கள்) எனும் நூலை மொழிபெயர்த்துள்ளவர்.
‘நற்றிணை’ பதிப்பில், ‘கலகம் செய்யும் இடது கை’, ‘கடவுள் கற்ற பாடம்’ ஆகிய தலைப்புகளில், பிரஞ்சுக்கதைகளின் மொழியாக்கத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளவர்.
இத்தொகுப்பில் உள்ள ஏதாவது ஒரு கதையினை உங்கள் விருப்பப்படி எடுத்து வாசித்துப் பாருங்கள். வாசகத் தோழமை நிறைந்த அவரது நடை, தனித்துவமான வாசிப்பு அனுபவம் ஏற்படுத்துவதை உணர்வீர்கள். சில இடங்களில் மகிழ்வீர்கள், சில இடங்களில் நெகிழ்வீர்கள். சிலர் மீது பரிவு ஏற்படும், சில அமைப்புகள் மீது சீற்றம் எழும். ஆம், காட்சிகள் நடக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் செக்காவ் நம்மையும் அந்த நிகழ்வில் பங்கேற்கச் செய்து விடுகிறார்.
கண்மனி டார்லிங் பேதை இப்படித் தலைப்புகளில் ஒரு கதை வந்திருக்கிறது தமிழில் இந்தக் கதையைப் பற்றி லியே டால்ஸ்டாய் சொல்லுகிறார் இந்தக் கதையை எத்தனை முறை வாசித்தாலும் கண்களைத் தொடைத்து கொள்ளாமல் இருக்க முடிவதில்லை செக்காவிடமே சொன்னாராம் அந்தப் பெண் பிள்ளையை சபிக்கக் கையை உசத்துகிறார் உசத்திய கை அவளை ஆசீர்வதித்து விடுகிறது என்றாராம்.