Skip to content

மொழிப்போர் களத்தில் தலைவர் கலைஞர்

Save 20% Save 20%
Original price Rs. 120.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price Rs. 120.00
Current price Rs. 96.00
Rs. 96.00 - Rs. 96.00
Current price Rs. 96.00
கழகத் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்மொழி வளர்ச்சிக்காக தனது இளம் வயதிலிருந்து அரும்பாடுபட்டதையும், இந்தி மொழி எதிர்ப்பைத் திறமையாக எதிர்கொண்டதையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகப் பேச்சாளர், திரு. கு. வாஞ்சிநாதன் தான் முரசொலியில் பல்வேறு தலைப்புகளில் எழுதியதைத் தொகுத்து மொழிப்போர் களத்தில் தலைவர் கலைஞர்' என்ற தலைப்பில் நூலாக வெளிக்கொணர்வது கண்டரிய மகிழ்ச்சி.
சென்னை, ராணிமேரிக் கல்லூரியைத் தலைமைச் செயலகமாக மாற்றிட அன்றைய அரசு முயன்ற போது, அதை எதிர்த்துப் போராட்டத்தில் பங்கு கொண்ட தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை கைது செய்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டபோது இந்நூலாசிரியர் திரு. கு. வாஞ்சிநாதன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டு, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டதை தலைவர் கலைஞர் அவர்கள் 18.04.2003 முரசொலியில் எழுதியது, தன் நெஞ்சை விட்டு அகலாத நிகழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது இளம் வயதிலேயே தன்னை மொழிப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டு, 1965-ம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் அரசு, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் மாணவர்களைத் தூண்டிவிட்டதாக கலைஞர் அவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டைச் சிறையில், தனிக் கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டு, துன்புற்றதைக்கண்ட பேரறிஞர் அண்ணா அவர்கள்

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.