Skip to content

திருவாருர் கே.தங்கராசு நினைவலைகள்

Sold out
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price Rs. 200.00
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

ஒரு மனிதன் நேர்மையானவன், ஒழுங்கானவன், நாணயமானவன் என்பதில்தான் அவனுடைய வாழ்க்கை இருக்கிறது என்பது பெரியாருடைய தத்துவம். பெரியார் தொண்டனுக்கான தகுதிகளும் இவைகளே. ஒருவன் பித்தலாட்டம் செய்வான், மோசடி செய்வான், ஒழுக்கங்கெட்டவன் என்றால் அவன் பெரியார் தொண்டனாக இருக்கவே தகுதியில்லாதவன்.

- திருவாரூர் கே. தங்கராசு

1947ஆம் ஆண்டிலிருந்து தந்தை பெரியாரின் தலைமையில் இயக்கப் பணியாற்றி கழகத்தின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற திருவாரூர் கே. தங்கராசுவின் பெரியார் பற்றிய, கழகம் பற்றிய நினைவலைகளின் தொகுப்பே இந்நூல். அந்த வகையில் இது அறுபத்தைந்து ஆண்டுகால திராவிடர் இயக்கத்தின் வரலாறாக காணும் தகுதி கொண்டிருக்கிறது.தந்தை பெரியாரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவராக கே. தங்கராசு இந்நூல் வழி நம் மனதில் பதிகிறார்.இயக்கத்தின் வளர்ச்சிக்கு தமிழினத்தின் மான மீட்புக்கு, பகுத்தறிவு எழுச்சிக்கு திருவாரூர் தங்கராசு எந்தளவு உறுதுணையாக விளங்கினார் என்பதை இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் உணர்த்துகிறது.-இரா. மணிகண்டன்.

 

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.