பெரியாரின் தனிநாடும் அம்பேத்கரின் மதமாற்றமும்
சென்னை அய்.அய்.டி.யில் அம்பேத்கர், பெரியார் படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த விவாதங்களில், அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம் என்றும் இருவரையும் இணைத்து ஒரு குழு அமைப்பதே முரணானது என்றும் பெரியார், அம்பேத்கர் இருவருடைய கொள்கைகளும் வேறு வேறானவை என்றும் அம்பேத்கரையும் பெரியாரையும் பிரிக்கின்ற சூழ்ச்சியை பார்ப்பன இந்துத்துவ அமைப்புகள் கட்டுப்பாடாக செய்து வருகின்றன.
ஆனால். பெரியாரும் அம்பேத்கரும் இந்து மதத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து ஒரே நேர்கோட்டில் பயணித்து களமாடியவர்கள். இந்து மதம் ஒழியாமல் சாதி ஒழியாது என்று பிரகடனம் செய்த புரட்சியாளர்கள் என்பது வரலாறு.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்து மதத்தின் ஆதாரமாக விளங்கி, அதைக் கட்டிக் காப்பாற்றிய வேத. மத, சாஸ்திர. புராணங்களை பொசுக்கிய இரு பெருநெருப்பின் சிறு பொறியை - வரலாற்றைத் திரிக்கும் வன்முறையாளர்களுக்குப் பதிலடியாகத் தருகிறது இந்நூல் .